சென்னை மைலாப்பூரில் பாகீரதி மாமியை தெரியாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அறுபத்தி ஐந்து வயதானாலும் சற்றும் பொலிவு குறையாத தோற்றமும், அந்த நாள் எம் ஏ ஆங்கில இலக்கியம் படித்த புதுமைப் பெண் என்ற பெருமையும் சேர்ந்த ஒருவர். அவருடைய பேரன் கணேஷுக்கு பாஸ்டனில் பெரிய உத்தியோகம் கை நிறைய சம்பளம். கணேஷின் பெற்றோர் பிள்ளையின் திருமணத்தை நடத்த வேண்டும் என்ற ஆவலில் கணேஷுக்கு கடிதம் எழுதி சென்னை வரும்படி அழைத்தனர். தாய் தந்தையரை விட பாட்டியின் செல்லமான கணேஷ் உடனே பாகீரதி பாட்டிக்கு தான் அமெரிக்காவில் ஒரு பெண்ணை விரும்புவதாகவும், அவள் அமெரிக்க பெண் என்றாலும் மிகவும் அடக்கமான குணமும் நம் நாட்டு கலாசாரத்தை விரும்பும் பெண் என்றும் எழுதி இருந்தான். கணேசனின் தந்தை சங்கரன் கடிதத்தை படித்து விட்டு பாகீரதியிடம் "பார்த்தாயா உன்னுடைய செல்ல பேரனின் காரியத்தை. இப்போ என்ன செய்யறது" என்று கோபமாக சொன்னான். சற்றும் கலங்காமல் பாகீரதி மாமி " சங்கரா, என் பேரனை எனக்கு தான் தெரியும். அவன் ஒரு காரியம் செய்தால் நன்றாக யோசித்துதான் செய்வான். சும்மா குதிக்காதே." என்றாள்.
பாகி மாமியின் காலேஜில் கூடப்படித்த ராபர்ட் என்பவர் இப்போது பாஸ்டனில் பெரிய தொழிலதிபராக இருந்தார். பாகி மாமி அவருக்கு உடனே ஒரு கடிதம் எழுதி, கணேஷின் அமெரிக்க பெண்ணை பற்றி விசாரித்து எழுதும்படி கூறினார். "Robert, my grandson is very smart and intelligent guy. He is my favourite too. He would not have chosen her unless she was really good, so I want you to do your research as confidentially as possible lest you hurt his feelings!" என்று கடைசியில் எழுதி மெயில் செய்தார். ராபர்ட் பாகி மாமியின் பரம விசிறியாக இருந்தவர். மாமியின் ஆங்கில புலமையில் பெரிதும் மதிப்பு கொண்டவர். இத்தனை வருடங்களுக்கு பின்னர் மாமியின் மெயில் கண்டு மிகவும் மகிழ்ந்த ராபர்ட் விவரங்களை சேகரிக்கலானார். கணேஷின் ஆபீசிலேயே அவனுடைய மேல் அதிகாரியாக அந்த பெண் வேலை பார்பதையும், டில்லியில் ஐ ஐ டி யில் படித்ததால் ஹிந்தியும் பேச தெரியும் என்றும் தமிழ் நாடு கோவில்களை பற்றி ஆராய்ச்சி செய்து கட்டுரை எழுதியவள் என்றும் அறிந்தார். மிக மகிழ்ச்சியுடன், பாகி மாமியை பல வருடங்களுக்கு பின்னர் பார்க்கும் ஆவலில் ஒரு சிறு ஐடியா செய்தார். மாமியின் ஆங்கில புலமையை நன்கு அறிந்தவராததால், பாஸ்டனில் உள்ள லோகல் யுனிவர்சிடியில் திராவிட மொழிகள் சம்மேளனத்தில் விரிவுரை ஆற்ற ஏற்பாடு செய்து விட்டார். தொலை பேசியில் மாமியுடன் தொடர்பு கொண்டு, முக்யமான விஷயம் சொல்லவேண்டுவதால் நேரிலேயே வருமாறும், பயண செலவிற்கு சம்மேளன கமிட்டி ஏற்பாடு செய்வதாகவும் சொன்னவுடன் மாமிக்கு தலை கால் புரியவில்லை. "அம்மா இது ஒரு நல்ல வாய்ப்பு , நீ நேரிலேயே போய் உன் பேரனை பார்த்து விவரம் அறிந்துகொள்ள அருமையான சந்தர்ப்பம், உடனே கிளம்பு." என்றான் சங்கரன்.
பாஸ்டன் ஏர்போர்டில் பாட்டியை வரவேற்க கணேஷும் ராபர்ட்டும் வந்திருந்தனர். பாட்டியின் இந்த திடீர் வருகையை சிறிதும் எதிர் பார்க்காத கணேஷ் மிகவும் மகிழ்ந்தான். அன்று மாலை யுனிவர்சிடியில் ஒரு நல்ல லெக்சர் இருப்பதால் பாகி மாமியை அதற்க்கு அழைத்து சென்றார் ராபர்ட், "Gods of India" என்ற தலைப்பில் பேசிய ஒரு அமெரிக்க பெண் எல்லோரையும் மெய் மறக்க செய்து இந்திய பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பற்றி அவ்வளவு அழகாக விவரம் கூறியது பாட்டியை மிகவும் கவர்ந்தது. ராபர்ட் நான் இந்த பெண்ணை சந்திக்க விரும்புகிறேன் என்று பாட்டி சொன்னதும், புன்முறுவல் பூத்தவாறே, நான் எதிர்பார்த்தேன் என்று சொன்ன ராபர்டை ஒன்றும் புரியாமல் நோக்கினாள் பாகி மாமி. அந்த பெண்ணை அருகில் கண்ட பாகி மாமிக்கு அவளின் அழகும், நளினமும், அடக்கமும் மிகவும் பிடித்துவிட்டது. ஆவலுடன் கை குலுக்கிய மாமி , "My Dear, Whoever marries you is the luckiest guy on earth! You are a rare combination of exceptional beauty and a brilliant mind. God Bless you" என்று வாழ்த்தினாள். அருகில் இருந்த ராபர்ட், "Baagi do you like to see that Lucky guy, he is right here." என்றவுடன் மாமிக்கு ஒன்றும் புரியவில்லை. பக்கத்தில் நின்று கொண்டிருந்த கணேஷைக்கூப்பிட்டு, "Baagi, Meet Ganesh.B.Tech.M.B.A, the Fiancé of this brilliant Lady!" என்று அறிமுகம் செய்தார். மெய் சிலிர்த்து போன மாமி கணேஷையும், லாரா பார்கரையும் கட்டி தழுவி முத்தமிட அருகில் இருந்த அனைவரும் பலமாக கை தட்டி பாராட்டினார்கள். … Love Has no Boundaries!!
Write a comment ...